தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி…!

323

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் திருச்சி நகர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கச்சிராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. மதுரையில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், மேடவாக்கம், ஆலந்தூர், மடிப்பாக்கம், மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
வானிலை மைய அறிவிப்பின்படி, வடகிழக்கு மழை தொடங்கியதை அடுத்து, இரண்டு மாதங்களில் ஆண்டு சராசரியாக 100 சதவீதத்துக்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலத்தை சூழ்ந்திருந்த வறட்சி, தண்ணீர் பஞ்சம் தீரும் என தமிழக மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.