தொடர் மழை காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை …!

893

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழையால் பெரும்பாலன இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் உட்பட 11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.