தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை ..

734

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
நெல்லை மாவட்டத்தில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதே போன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றின் காரணமாக கிளப் ரோட்டில் மரம் விழுந்துள்ளதால் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரியில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடுகிறது.