அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை.. | தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..!

497

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இருப்பதாக கூறினார். காற்றழுத்த தாழ்வு பகுதியாக லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்தார்.