மகாராஷ்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

186

மகாராஷ்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் கனமழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், தாராவி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சையான் ரயில் நிலையத்தின் ஒருபகுதி, தண்டவாளம் மழைநீரில் மூழ்கியதால், ரயில் போக்குவரத்தில் தேக்கநிலை நீடித்தது. இதேபோல் குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் அகமதாபாத் நகரத்தின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.