சென்னையில் பரவலாக மழை..!

338

சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து பொதுமக்கள் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையிலும் சென்னையில் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். தமிழகத்தில் வரும் 22-ம் தேதிமுதல் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான, தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, கிண்டி, மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, போரூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் சென்னை வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகள் வரண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பொய்துள்ள இந்த மழை அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.