வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி | கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு …!

556

வங்கக்கடல் பகுதியில், உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறிய அவர், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, பலத்த மழை காரணமாக, 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.