சென்னையில் இரவு முழுவதும் மிதமான மழை..!

177

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இரவு முழுவதும் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

எனினும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஒட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, நாகூர், கருவேலங்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் சம்பா சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.