தொடர் கன மழையால் சபரிமலைக்கு யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு..!

251

தொடர் கன மழை காரணமாக சபரிமலை கோவிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் பலத்த மழை மற்றும் பம்பையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பம்பை திருவேணியில் பாலத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தற்போது மழை அதிகரித்து வருவதால், சபரிமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பக்தர்கள் பத்தனம் திட்டையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். அதேசமயம் வெள்ளநீர் கரைப்புரண்டு ஓடுவதால் சபரிமலைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது