கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

125

தொடரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 500 கிராமங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் பழையாற்றில் கரைப்புரண்டு ஓடுவதால் ஏராளமான ஏக்கர் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. மங்கலம் உள்ளிட்ட சாலைகளிலும் உடைப்பு ஏற்பட்டிருப்பதால் சீதாபால், அருமநல்லூர், காளிகேசம் என 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வைக்கலூர், மங்காடு குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை படகுகள் மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டு வருகின்றனர்.

இரணியல் அருகே மண் சரிவு ஏற்பட்டதால் அந்த வழியாக இயக்கப்பட இருந்த 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2வது நாளாக நாகர்கோவிலிருந்து இயக்கபட இருந்த திருவனந்தபுரம், கொச்சுவேலி ரெயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.