தென்மேற்கு பருவமழையால் செங்கற்கள் உற்பத்தி பாதிப்பு..!

175

பொள்ளாச்சி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பூவலப்பருத்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. ஒரு நாளுக்கு 5 ஆயிரம் செங்கற்கள் உற்பத்தி செய்து வந்த நிலையில் மழை காரணமாக கடந்த 20 நாட்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்த செங்கற்கள் மழையில் கரைந்து வீணாவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.