5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

234

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடற்கரை ஒட்டிய பகுதியில் தரைக்காற்று வேகமாக வீசும் என்பதால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் வைக்கும்படியும் எச்சரித்துள்ளது. இதனிடையே, சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.