தேனியில் தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை..!

195

தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.