தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை..!

219

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தள்ளது. இதனால் ஆறு மற்றும் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை செய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 87 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 6ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மின் கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மின் கம்பங்கள், மரங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சூறைக்காற்று வீசி வருவதால், கடலில் ராட்சத அலை எழும்பி, கடல் கொந்தளிப்படன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை கம்பிபாடு பகுதியை தாண்டிச் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர் .