இலங்கையில் பெய்த கனமழையால் இதுவரை 21 பேர் உயிரிழப்பு

415

இலங்கையில் பெய்த கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொழும்பு, பொலநறுவா, புத்தளம், மொனறாகலா, காலே, ரத்தினபுரி, அனுராதபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் மண் சரிவுக்கு இதுரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.