தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

534

தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்க்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி குமரி கடல் பகுதியை நோக்கி நகர்வதால் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று வேகமாக வீச வாய்ப்பிருப்பதால், குமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.