அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை | தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு.

363

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.