தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

255

தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்ட பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மழைபெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வெப்பம் 35 டிகிரி செல்சியஸ்சும், குறைந்த பட்ச வெப்பம் 27 டிகிரி செல்சியஸ்சாக பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.