வங்கக் கடலில் எற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு நிலை காரணமாக, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

223

வங்கக் கடலில் எற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு நிலை காரணமாக, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வங்கக் கடல் பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் சேலம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற உள் மாவட்டங்களில் குளிர் அதிகமாக காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் வரும் டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பிறகு பருவநிலை மாற்றம் அடைந்து மழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.