வங்கக்கடலில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி. தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

134

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உடுமலைப்பேட்டை மற்றும் வாடிப்பட்டியில் தலா 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.