வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

165

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது