ஆந்திர கடற்கரையொட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழைபெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் குறிப்பாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில், 2 ஆயிரத்து 2 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.