தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

324

தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல இடங்களில், நேற்றிரவு லேசான மழை பெய்தது. சில இடங்களில் சற்று பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெப்ப சலனத்தால் மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறியுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.