தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

301

வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு காற்றுசுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்தமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 50மில்லி மீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 40மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.