வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

125

வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் ஓமலூரில் 10 சென்டி மீட்டர் மழையும், ஆரணியில் 9 சென்டி மீட்டர் மழையும், சூளகிரி மற்றும் வாணியம்பாடியில் தலா 8 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைப் பெய்யக்கூடும் எனவும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.