கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு | பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றம்

140

பெரு நாட்டில் மழை காரணமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அவரசமாக வெளியேறினர்.

பெரு நாட்டில் டின்கோ மரியா (Tingo Maria) என்ற பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஆற்றுவெள்ளம் சாலைகளிலும் ஓடியதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சில வாகனங்கள் ஆபத்தையும் உணராமல் சாலையைக் கடந்து சென்றன. மேலும் ஆண்டியன் கவுண்டி பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் அருகில் இருந்த மலைகிராமம் ஒன்றில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகளும், மணலும் சரிந்து விழுந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலச்சரிவினால் அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.