உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 3 வது முறையாக பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!

603

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் 3 வது முறையாக பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
ஹவுராவிலிருந்து ஜபல்பூர் வழியாக ஷக்திகுஞ்ச் நோக்கி ஏராளமான பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. உத்திர பிரதேச மாநிலம் ஓப்ரா பகுதி அருகே இந்த ரயில் சென்றுகொண்டிருந்த போது 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும், லேசான காயங்களுடன் பயணிகள் உயிர்தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தினால் அந்த
ரயில்தடம் வழியாக செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அலட்சிய போக்கால் கடந்த 30 நாட்களில் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 3 ரயில்விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதனால் ரயில்பயணிகளிடையே பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.