ரயில் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை. தடயம் சிக்கவில்லை என சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் தகவல்.

254

ரயிலில் வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில், வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி கோட்ட ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் ஆனி விஜயா, பார்சல் அலுவலகத்திற்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். சேலம் ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர், சேலம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், பணம் பார்சல் செய்தவர்கள், மற்றும் வங்கி ஊழியர்கள் யாரேனும் கொள்ளையர்களுக்கு தகவல் அளித்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து இதுவரை எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என்றும் சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன் தெரிவித்தார்.