ரயில்நிலையங்களில் 1 ரூபாய் மருத்துவத்திட்டம் | இம்மாத இறுதியில் தொடங்க மத்திய அரசு முடிவு ..!

2093

ரயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில் நிலையங்களில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரயில் பயணிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக்குகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கிழக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பத்து ரயில்நிலையங்களில் அடுத்த மாத இறுதிக்குள் கிளினிக்குகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவ கட்டணமாக ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து மேற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரயில் நிலையங்களில் இந்த திட்டத்தை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.