ரயில்வேயில் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உடனடியாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

425

ரயில்வேயில் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உடனடியாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் போக்குவரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ரயில்வே துறையின்கீழ், நாள்தோறும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 500 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வேயில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஓய்வுபெறுகின்றனர்.
இவர்கள் தவிர நிரப்பப்படாத பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தநிலையில், உருவாகும் காலிப்பணியிடங்கள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்ப ரயில்வே அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் ரயில்வே அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்யும். அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் வேலை வாய்ப்புகள் ரயில்வே துறையில் நிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.