ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது விபரீதம்.. 11 குழந்தைகள் உடல் சிதறி பலி.

1306

உத்தர பிரதேசத்தில் ஆளில்லா கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேனின் மீது பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் டெவின் என்னும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வழக்கம்போல் மாணவர்கள் வேனில் சென்றுள்ளனர். இந்நிலையில் குஷிநகரில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த பயணிகள் ரெயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் 11 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே கடந்த 10ஆம் தேதி ஹிமாச்சல் பிரதேசத்தில் 100 அடி ஆழ பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 27 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.