பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் மோதியதில் 7 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

231

பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் மோதியதில் 7 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரசேத மாநிலம் பதோஹி என்ற இடத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிவந்த வேன் இப்பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் திடீரென்று மோதியதால் வேனில் உள்ள பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த குழந்தைகளை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.