அவசர சட்டத்திற்கு எதிரான, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் 2 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

204

அவசர சட்டத்தின் மூலம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில்
மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து ரயில் சேவையில் தெற்கு ரயில்வே பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
சென்னை எழும்பூர் – மும்பை தாதர் இடையிலான விரைவு ரயில்
இன்று காலை 6,50 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை – நிஜாமுதீன், திருச்சி – திருநெல்வேலி இடையிலான 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையேயான விரைவு ரயில் மானாமதுரை, விருதுநகர் வழியாகவும், ஓஹா – தூத்துக்குடி இடையேயான விரைவு ரயில் திருச்சி வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மைசூர்- தூத்துக்குடி, கட்சேகுடா – மதுரை விரைவு ரயில்கள் திண்டுக்கல்லில் இருந்தும், காரைக்குடி – சென்னை எழும்பூர், மதுரை – சென்னை எழும்பூர், ராமேஸ்வரம் -புவனேஸ்வர் ஆகிய விரைவு ரயில்கள் திருச்சியிலிருந்தும் புறப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.