ரயில் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கான, இழப்பீட்டு தொகையை 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

170

ரயில் விபத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயம் அடைபவர்களுக்கு ரயில்வே துறையிலிருந்து இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதன்படி, ரயில் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அந்த தொகை, தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் ரயில்வே இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 92 பைசா கட்டணத்தில் இன்சுரன்ஸ் காப்பீடு வழங்கும் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.