ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

581

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 7ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா ரெயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை நெல்லை இடையே அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூரிலிருந்து சுவிதா ரெயில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. திருச்சியிலிருந்து அக்டோபர் 8ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அன்று இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.