தென் மாவட்ட ரயில்கள் ரத்து , ரயில் புறப்படும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதி !

170

தமிழகத்தில் தொடர்ந்து வலுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தால், சென்னைக்கு வரவேண்டிய 10 தென்மாவட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தமிழக முழுவதும் போட்டங்கள் வலுத்துள்ளன. ஆங்காங்கே தொடர்ந்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி -சென்னை, செந்தூர் விரைவு ரயில், கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயில், நெல்லை-சென்னை விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. மேலும், திருவனந்தபுரம்-சென்னை விரைவு ரயில், நாகர்கோயில்-சென்னை, ராமேஸ்வரம்-சென்னை சேது, பொதிகை விரைவு ரயில் உள்ளிட்ட 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையித்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சில ரயில்கள் பாதி வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதால், புறப்படும் நேரம் தெரியாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.