புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்-தெற்கு ரயில்வே!

463

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மதுரை – செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரயில் தஞ்சை, கடலூர் வழியாக டிசம்பர் 29, ஜனவரி 1, 5 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளளது.
இதேபோன்று, செங்கல்பட்டு – மதுரை இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 30, ஜனவரி 2, 6 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு விவரங்களை தெற்கு ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.