எஸ்.பி.கே. கட்டுமான குழுமத்தில் ஐ.டி.ரெய்டு..!

189

கிறிஸ்டி நிறுவனத்தை தொடர்ந்து அரசு ஒப்பந்த பணி மேற்கொண்டுள்ள எஸ்.பி.கே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாதுரை, நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவர், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் சாலை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். மதுரை மண்டலோ நகரிலிருந்து கப்பலூர் இணைப்பு சாலையான நான்கு வழிச்சாலையும் இவர் எடுத்துக்கொண்ட ஒப்பந்தத்தின் பேரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதன் புகாரில் அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அருப்புக்கோட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதே போல் சென்னையிலும் செய்யாதுரை மகன் நாகராஜனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். அண்ணா நகர், போயஸ் கார்டன், மயிலாப்பூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் நிறுவனத்திற்கு சொந்தமான 30 வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.