பாலியல் தொல்லைகள் தமக்கு நேர்ந்தால் தயக்கமின்றி தைரியமாக வெளிப்படுத்துவேன் – நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்

642

பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து தாம் முன்பைப் போல் எப்போதும் தயக்கமின்றி பேசுவேன் என நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கூறியுள்ளார்.

மீ டூ எனும் ஆன்லைன் ஹேஸ் டேக் மூலம் இயக்கத்தை உருவாக்கி திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளைப் பட்டியிலிட்டு வருகின்றனர். தனுஸ்ரீ தத்தா, ஜூவாலா கட்டா, சின்மயி உள்ளிட்டோர் இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தாம் இதற்கு முன்பும் பாலியல் தொல்லை குறித்து வெளிப் படுத்தியதாகவும், தற்போது மட்டுமின்றி இனி வரும் காலங்களிலும் அவ்வாறு நேர்ந்தால் தயக்கமின்றி தைரியமாக வெளிப்படுத்துவேன் எனவும் அவர் கூறியுள்ளார். பெண்கள் தங்களுக்காக குரல் கொடுக்கவும், அதுகுறித்து விவாதிக்கவும் சமூக வலைதளங்கள் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் ஐஸ்வர்யா ராய் குறிப்பிட்டார்.