நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 6 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

239

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 6 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையை டெல்லியில் வெளியிட்டு பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலையாக வைத்திருக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் சாதகமான பலன்களை தந்துள்ளதாக தெரிவித்த ரகுராம் ராஜன், இந்தியாவில் பருவமழை எதிர்பார்த்தப்படி தொடங்கியுள்ளதாக கூறினார்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய ரகுராம் ராஜன், பணப்புழக்கம் பெருகி, நுகர்வோரின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகைய அம்சங்களின் அடிப்படையில், 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 புள்ளி 6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.