பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரான மனநிலை கொண்டவர்-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

166

பிரதமர் மோடி தலித் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில், தலித் அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் எதிரான மனநிலை கொண்டவர் என்றார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, தலித்துகள் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் போது தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எழுதியதாக அவர் கூறினார். எஸ்சி,எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி கோயலுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றார். மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக நாடே எழுந்து நிற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.