தலைமை பண்புக்குரிய பக்குவம் அடையவில்லை ராகுல்காந்தி குறித்து ஷீலா தீட்சித் கருத்தால் சர்ச்சை !

187

தலைமை பண்புக்குரிய பக்குவத்தை ராகுல்காந்தி இன்னும் அடையவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு தலைமுறை மாற்றத்துக்குள் சென்று கொண்டிருப்பதாக கூறினார். இந்த மாற்றத்துக்கு ஏற்ப
அரசியல் நடவடிக்கைகளில் காங்கிரஸ் செயலாற்றி வருவதாக தெரிவித்த ஷீலா தீட்சித், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்குரிய பக்குவத்தை ராகுல்காந்தி இன்னும் அடையவில்லை என்று கூறினார். அவருடைய வயதே இதற்கு காரணமாக இருப்பதாக தெரிவித்த அவர், சிறிது காலம் அவருக்கு அவகாசம் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். ஷீலா தீட்சித்தின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராகுல்காந்தி குறித்து தாமதமாக கூறினாலும், சரியான கருத்தையே ஷீலா தீட்சித் வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.