ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் !

316

தாக்குதல் நடத்துவது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் பாதை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே, பாஜகவை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்துவது தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் பாதை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், மறியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட திருநாவுக்கரசர் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது குறித்து நமது மாலை முரசு செய்தியாளர் நந்தினி தரும் கூடுதல் தகவல்களை காணலாம்..