ராகுல்காந்தி நார்வேக்கு பயணம்!

291

நார்வேக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் சார்பில் பா.ஜ.கவுக்கு எதிராக நாளை பேரணி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், நார்வே வெளியுறவுத்துறையின் அழைப்பின் பேரில் அந்நாட்டு அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆஸ்லோ செல்வதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லாலுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணியை புறக்கணிக்கும் நோக்கிலேயே ராகுல் நார்வேக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பேரணியில் காங்கிரஸ் சார்பில் யார் பங்கேற்பார் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை.