காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்..!

114

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை ‘காவலாளி ஒரு திருடன்’ என விமர்சித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாகவும் பிரதமருக்கு எதிராக ராகுல் காந்தி கருத்து தெரிவித்து வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தி தொடந்து மீறி வருவதாகக் கூறிய அவர், எனவே ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.