பிரதமர் மோடி அத்வானியை அவமதிக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

196

பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானியை அவமதித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடையும் என்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க வை வீழ்த்தும் என அவர் உறுதியளித்தார். பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் கொள்கையை காங்கிரசால் மட்டும் தான் தோற்கடிக்க முடியும் என கூறிய அவர், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி அவமதித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்வானிக்காக தான் வருத்தப்படுவதாகவும், அவருக்கு மோடியை விட காங்கிரஸ் அதிகளவு மதிப்பளித்து வருகிறது என்றும் ராகுல் தெரிவித்தார்.