மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!

90

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை கையில் எடுத்ததால், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மத்திய அரசு பதவிநீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், சிபிஐ தலைவரை பதவிநீக்கம் செய்ய பிரதமர் ஏன் இவ்வளவு தீவிர அவசரம் காட்டுகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஈடுபட்டதாலேயே அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.

மேலும், அலோக் வர்மா விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கூடி ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.