கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

291

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது. இதையடுத்து ஜே.டி.எஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் தலைவர்கள் பலர், கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அவர்கள், டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் எம்.பி. பட்டீல் தனக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்டுள்ளார். ஆனால் துணை முதல்வர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, பெங்களுருவில் நாளை எம்.பி. பாட்டீல் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்டீலுக்கு ஆதரவாக சுமார் 40 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அணி திரளுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.