இந்தியா-ஏ கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

349

இந்தியா-ஏ கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இந்தியா ஏ அணிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜூன் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதனிடையே டிராவிட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ். லக்ஷ்மணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து ராகுல் டிராவிட்டின் பதவி காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பயிற்சியாளர் பணிக்கு ராகுல் டிராவிட்டுக்கு ஊதியமாக 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அந்த தொகை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.