சசிதரூர் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது- ராகுல்

90

காயம் ஏற்பட்ட அடுத்த நாளே மீண்டும் பிரசாரத்திற்கு திரும்பிய சசி தரூரை ராகுல் காந்தி பாராட்டி உள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி வேட்பாளரான சசி தரூர், அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் துலாபாரம் கொடுத்த போது, தலையில் தராசு அறுந்து விழுந்து காயமடைந்தார்.இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சசி தரூருக்கு ஆதரவாக திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவர் படுகாயமடைந்ததை கேள்விப்பட்டு கவலைய டைந்ததாகவும், அவர் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.இது அவரின் மனஉறுதியை காட்டுவதாக கூறிய ராகுல், சசி தரூர் கேரளாவின் விலைமதிக்க முடியாத சொத்து என்றும் பாராட்டினார்.